×

பெரியகுளம் அருகே மழையில்லாததால் வறண்டு கிடக்கும் எலிவால் அருவி

பெரியகுளம் : போதிய மழையில்லாததால், பெரியகுளம் அருகே உள்ள எலிவால் அருவி வறண்டு கிடக்கிறது. பெரியகுளம் அருகே, மஞ்சளார் அணைக்கு மேல் பகுதியில் எலிவால் அருவி உள்ளது. இந்த அருவிக்கு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும்போது நீர்வரத்து இருக்கும். இந்த அருவி தமிழகத்தின் மிக உயரமான அருவியாகவும், இந்திய அளவில் 6வது உயரமான அருவியாகவும் உள்ளது. கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் எலிவால் அருவியின் இயற்கை அழகையும் கண்டுகளிப்பர். இந்நிலையில், கடந்த  இரண்டு மாதங்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யாத நிலையில், நீர்வரத்து குறைந்து தற்போது எலிவால் அருவி வறண்டு காணப்படுகிறது.இதனால், கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் நீர்வரத்து இல்லாமல் இருப்பதை கண்டு ஏமாற்றம் அடைகின்றனர்….

The post பெரியகுளம் அருகே மழையில்லாததால் வறண்டு கிடக்கும் எலிவால் அருவி appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Elewal Fall ,Elewal Flow ,Marjalar Dam ,Eliwal Fall ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால்...